'காங்கிரஸ் டிஎன்ஏ பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது' - சிவராஜ் சவுகான் கோபம்

'காங்கிரஸ் டிஎன்ஏ பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது' - சிவராஜ் சவுகான் கோபம்

சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக்விஜய் சிங்கின் கருத்துக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், காங்கிரஸின் டிஎன்ஏ பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளது என்று கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 2019ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக மத்தியில் உள்ள பாஜக அரசு கூறினாலும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று திக்விஜய் சிங் கூறியிருந்தார்.

இது குறித்து போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச முதல்வர் திக்விஜய் சிங், "காங்கிரஸின் டிஎன்ஏ பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது. சில சமயங்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததற்கான ஆதாரத்தையும், சில சமயங்களில் ராமர் இருந்ததற்கான ஆதாரத்தையும் காங்கிரஸ் கேட்கிறது. மீண்டும், திக்விஜய் சிங், பாரத் ஜோடோ யாத்ராவில் நடக்கும்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததற்கான ஆதாரத்தைக் கேட்டுள்ளார். அவர் ராணுவ வீரர்களின் மன உறுதியைக் குலைக்கும் பாவத்தைச் செய்கிறார். பாகிஸ்தானுடன் தான் நிற்பதாகக் காட்டுகிறார்" என்று கூறினார்.

மேலும், "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து எனக்கு பதில் வேண்டும், இது என்ன மாதிரியான பாரத் ஜோடோ யாத்திரை? துக்டே துக்டே கும்பல் உங்களுடன் நடந்து வருகிறது, ராணுவத்தின் மன உறுதி குறைந்து வருகிறது. ராணுவத்தின் பலம் குறித்து ராகுல் காந்தியும் கேள்வி எழுப்புகிறார். குறைந்தபட்சம் ராணுவத்தின் மன உறுதியைக் குறைக்கும் பாவத்தையாவது காங்கிரஸ் செய்யக் கூடாது" என்று கூறினார்.

திக்விஜய் சிங்கின் அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது, மத்திய பிரதேசம் சிமியின் (இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம்) கோட்டையாக இருந்தது என்றும் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டினார்.

பிப்ரவரி 14, 2019 அன்று, காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இதில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். பதிலடி கொடுக்கும் விதமாக, பிப்ரவரி 26, 2019 அன்று, இந்திய விமானப்படை போர் விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் மேம்பட்ட பயங்கரவாத பயிற்சி முகாமை குறிவைத்து சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in