காமராஜர் வேடமணிந்து பாஜகவினர் பிரச்சாரம்... கொதிக்கும் காங்கிரஸ் கட்சியினர்

காமராஜர் வேடமணிந்து பாஜக பிரசாரம்
காமராஜர் வேடமணிந்து பாஜக பிரசாரம்

திருப்பூரில் காமராஜர் வேடமணிந்து, பாஜகவினர் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு பிரசாரம் செய்த நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர், கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நாளை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் செய்யும் வகையில் கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று துண்டறிக்கைகளை, பல்லடம் நகர பாஜகவினர் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காமராஜர், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், அஜித் ஆகியோரின் வேடமணிந்து பாஜகவினர் பிரசாரம் மேற்கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு
காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வாழ்ந்து மறையும் வரை, காமராஜர் காங்கிரஸ்காரராகவே இருந்ததாகவும், மதச்சார்பற்றவராக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அரசியல் ஆதாயத்திற்காக காமராஜரின் புகழை கெடுக்கும் வகையில் பாஜகவினர் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பல்லடம் நகர காங்கிரஸ் கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு
காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு

மேலும் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நாளை நடக்கவிருக்கும் ’என் மண் என் மக்கள்’ நிகழ்ச்சிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் பல்லடம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in