காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் முடிந்துவிட்டனர் - மீண்டும் பாஜக ஆட்சிதான்: அமித் ஷா உறுதி

அமித் ஷா
அமித் ஷா

இந்த ஆண்டு நடைபெற உள்ள திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற ஜன் விஸ்வாஸ் யாத்திரையில் இன்று பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் பாஜக நல்லாட்சி அளித்துள்ளதாகவும், அக்கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.

அப்போது, "இந்தப் பேரணியில் அதிகளவில் மக்கள் கலந்துகொண்டது பாஜக மீதான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மேலும் இது சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதைக் காட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் நலனுக்காக பாஜக உழைத்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை இனி மக்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி நாட்டில் முடிந்துவிட்டது, கம்யூனிஸ்டுகள் உலகில் முடிந்துவிட்டது. முந்தைய கம்யூனிஸ்ட் அரசாங்கங்களின் திரிபுரா நிர்வாகத்தினால் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில், பாஜக ஒரு வளமான நிலைக்கு அடித்தளம் அமைத்தது” என்று கூறினார்.

மேலும், "திரிபுராவில் இப்போதுள்ள அரசு பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு சுகாதார கழிப்பறைகள், எரிவாயு இணைப்புகள், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை வழங்கியது. திரிபுரா பயங்கரவாதம், ஊடுருவல், ஆயுதக் கடத்தல், ஊழல் மற்றும் பழங்குடியினர் மீதான குற்றங்களுக்கு பெயர் பெற்றது. ஆனால் இப்போது மாநிலம் வளர்ச்சியில் முன்னேறியுள்ளது. திரிபுராவில் எங்கள் ஐந்தாண்டு ஆட்சியில், சட்டவிரோதமான திரிபுராவின் தேசிய விடுதலை முன்னணியுடன் ஒருமித்த கருத்தை எட்டிய பின்னர் ஆயுதமேந்திய கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. எங்கள் முக்கிய முன்னுரிமை மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்காக உழைப்பதுதான்” என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in