ஏழை மாணவர்களின் உதவித்தொகையை நிறுத்துவதால் மோடி அரசுக்கு என்ன லாபம்? - கார்கே கேள்வி

ஏழை மாணவர்களின் உதவித்தொகையை நிறுத்துவதால் மோடி அரசுக்கு என்ன லாபம்? - கார்கே கேள்வி

1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘ஏழை மாணவர்களிடமிருந்து பணத்தை பறிப்பதால் மோடி அரசுக்கு என்ன லாபம்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த செவ்வாயன்று, மத்திய அரசு சிறுபான்மை சமூகங்களுக்கான அதன் மெட்ரிக் முன் உதவித்தொகை திட்டம் 9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்தது. முன்னதாக, 1 முதல் 10 -ம் வகுப்பு வரையில் பயிலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, "நரேந்திர மோடி ஜி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான ப்ரீ-மெட்ரிக் கல்வி உதவித்தொகையை உங்கள் அரசு நிறுத்தி விட்டது. ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகையை பறிப்பதால் என்ன பயன்? ஏழை மாணவர்களிடமிருந்து இந்தப் பணத்தைப் பறித்ததன் மூலம் உங்கள் அரசு எவ்வளவு சம்பாதிக்கும் அல்லது சேமிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கல்வி உரிமைச் சட்டம், 2009ன் படி ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியை (ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை) வழங்குவதைக் கட்டாயமாக்குகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதன் மூலம், மத்திய அரசு கல்வி உதவித் தொகையை நிறுத்தும் தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in