எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்... பிரச்சாரக் கூட்டத்தில் கார்கே உருக்கம்

கலபுர்கி பிரச்சார கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே
கலபுர்கி பிரச்சார கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே

‘காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்காது போனால், இங்கே எனக்கு இனி இடமே இல்லை என்று நினைப்பேன்’ என கர்நாடக மாநிலத்தின் தனது சொந்த மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உருக்கம் தெரிவித்துள்ளார்.

கோடை வெயிலுக்கு இணையாக அரசியல் பிரச்சார மேடைகளில் அனல் பரத்தி வருகிறது. வீராவேசம், சவடால்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் வெகு அரிதாக பொதுஜனத்தை நெகிழ வைக்கும் உரைகளும் இடம்பெறுகின்றன. அவற்றில் ஒன்றாக 81 வயதாகும் மல்லிகார்ஜுன் கார்கேவின் கலபுர்கி பிரச்சார உரை இடம்பெற்றுள்ளது.

வயதில் மட்டுமன்றி அரசியலிலும், மக்கள் சேவையிலும் சீனியரான மல்லிகார்ஜுன் கார்கே நெருக்கடியான நிலையில் தனது கட்சி அரசியலை தொடர்ந்து வருகிறார். பாஜக நிச்சயமாக மூன்றாம் முறை ஆட்சியை பிடிக்கும் என்ற திட்டவட்டமான கருத்துக்கணிப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியை வழி நடத்த வேண்டிய கேப்டனாக பெரும் சவால்களுக்கு ஆளாகி உள்ளார்.

சோனியா மற்றும் ராகுல் உடன் கார்கே
சோனியா மற்றும் ராகுல் உடன் கார்கே

பிரதான எதிர்முகாமான பாஜக மட்டுமன்றி, தோள் சேர்ந்திருக்கும் ’இந்தியா கூட்டணி’யின் கட்சிகள் தரும் இடையூறுகளும் தனி சவால்களாக அவருக்கு சேர்ந்திருக்கிறது. கூடவே, மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்ற அச்சத்தில், பாஜகவுக்குத் தாவும் காங்கிரஸ் தலைகளாலும் பெரும்தலைவலிக்கு கார்கே ஆளாகி இருக்கிறார். இந்த குடைச்சல்களுக்கும் மத்தியில், மக்களவைத் தேர்தலை மறுதலித்து மாநிலங்களவை மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக இம்முறை கார்கே தேர்வானதற்கு பாஜகவின் கேலிகளையும் எதிர்கொண்டிருக்கிறார்.

மக்களவையை கார்கே தவிர்த்தாலும், அவரது செல்வாக்குக்கு உரிய கர்நாடகத்தின் கலபுர்கி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தே தீருவது என பாஜக கங்கணம் கட்டியிருக்கிறது. அங்கே காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது என்பது கார்கேவை தோற்கடிப்பதற்கு இணையானது என்பதால், பாஜக அதில் மும்முரம் காட்டுகிறது. அதிலும் கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டமணி அங்கே காங்கிரஸ் வேட்பாளராக நிற்பது தனிப்பட்ட வகையிலும் கார்கேக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறது.

மல்லிகார்ஜுன் கார்கே
மல்லிகார்ஜுன் கார்கே

இப்படி பல திசையிலுமாக காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கான நெருக்கடிக்கு கார்கே ஆளாகி இருக்கிறார். இந்த சூழலில் அப்சல்பூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, “எனக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காது போகலாம். ஆனால் என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வருவீர்கள் என நம்புகிறேன். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று உருக்கமாக பேசினார்.

2019 லோக்சபா தேர்தலில் தன்னை தோற்கடிக்க ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டுள்ளது என்று கூறிய அவர், தன்னை தோற்கடிக்க பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பலர் கலபுர்கியில் அடுத்தடுத்து முகாமிட்டுள்ளனர் என்றார். “கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எம்.பி., மற்றும் அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகளை அறிவீர்கள். அப்படியும் காங்கிரஸ் இங்கே தோல்வியடைந்தால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்றே கருதுவேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார் கார்கே.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in