பரபரப்பு... வெளியானது காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்!

சோனியா காந்தி
சோனியா காந்தி

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிஜோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17-ம் தேதிகளிலும், மத்தியப் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 17-ம் தேதியும், மிஜோரம் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 7-ம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 25-ம் தேதியும், தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30-ம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வனைத்து தேர்தல்களுக்குமான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

இந்த நிலையில், ஐந்து மாநில தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 144, சத்தீஸ்கர் 30, தெலங்கானா 55 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் கமல்நாத் போட்டியிடுகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in