காங்கிரஸ் வேட்பாளர் ஓரிரு நாளில் தேர்வு: தினேஷ் குண்டுராவ் தகவல்

தினேஷ் குண்டுராவ்
தினேஷ் குண்டுராவ்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஓரிரு நாளில் தேர்வு செய்யப்படுவார் என்று மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பால் உயிர் இழந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட அனைத்துக் கட்சிகளும் முட்டி மோதி வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இம்முறையும் காங்கிரஸ் கட்சிக்கே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். பாஜக இருநாள்களில் முடிவினை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அமமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது குறித்து சென்னை, சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இடைத்தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக வெல்லும். ஓரிரு நாள்களில் வேட்பாளர் குறித்து முடிவெடுக்கப்படும் ”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in