புதுச்சேரியில் வாக்கு சேகரிப்பின்போது காங்கிரஸ் வேட்பாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்

புதுச்சேரியில் வாக்கு சேகரிப்பின்போது காங்கிரஸ் வேட்பாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரசாரத்தின் போது காங்கிரஸ் வேட்பாளர் மயங்கியதால் பரபரப்பு
பிரசாரத்தின் போது காங்கிரஸ் வேட்பாளர் மயங்கியதால் பரபரப்பு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களாக தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று புதுச்சேரி காமராஜர் நகர் பகுதிகளில் வேட்பாளர் வெ.வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வள்ளலார் சாலை அருகே ஜீவா நகரில் திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு வந்தபோது அருகில் நின்று கொண்டிருந்த வைத்திலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக கட்சி நிர்வாகிகள் அவர் மீது தண்ணீர் தெளித்து, எழுப்பி இளைப்பாற வைத்தனர்.

புதுச்சேரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்
புதுச்சேரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்

இன்று காலை முதலே கடும் வெயில் நிலவியதால், 73 வயதான வைத்திலிங்கம் திடீரென மயக்கமடைந்ததாார். பின்னர் அங்கு மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக வைத்திலிங்கத்துக்கு மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில், வெயில் தாக்கத்தை எதிர்கொள்ள ஜூஸ், குடிநீர் ஆகியவை வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு வழங்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் அவர் மீண்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்டடார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in