நெல்லை, விளவங்கோடு வேட்பாளர்கள் அறிவிப்பு... மயிலாடுதுறையால் மூச்சுத் திணறும் காங்கிரஸ்!

ராபர்ட் ப்ரூஸ், தாரகை
ராபர்ட் ப்ரூஸ், தாரகை

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வழக்கறிஞர் ராபர்ட் ப்ரூஸ், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தாரகை ஆகியோர் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விளவங்கோடு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்து விட்டதால், அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணியில் அந்த தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்கெனவே புதுச்சேரி உட்பட 8 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

இருப்பினும் திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அப்போது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் தேசிய தலைமை இன்று நாடு முழுவதும் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் 6வது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி தொகுதியில் வழக்கறிஞர் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக களமிறங்குவார் எனவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட்
விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட்

இருப்பினும் இந்த பட்டியலில் மயிலாடுதுறை தொகுதி இடம் பெறவில்லை. மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் தொடர்ந்து தவித்து வருகிறது. இந்த தொகுதியில் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி, கடந்த முறை திருச்சி தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் மற்றும் அந்த தொகுதியின் முன்னாள் எம்.பி மணிசங்கர் அய்யர் தரப்பு என பலரும் போட்டியிட முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இன்னும் சிலரும் இந்த தொகுதியை குறி வைத்திருப்பதால், காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்று அல்லது நாளைக்குள், மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in