முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன்... முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

’’முதல்வர்கள் பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக இருந்தால்தான் பல்கலைக்கழங்கள் வளர முடியும், வளரும்; மற்றவர்களின் கையில் இருந்தால் அதன் நோக்கமே சிதைந்து போய்விடும் என்பதற்காகத்தான் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என 2013ம் ஆண்டே அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அவரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்’’ முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழா முதல்வர் ஸ்டாலின்
பட்டமளிப்பு விழா முதல்வர் ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக முதல்வரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பாடகி பி.சுசீலா மற்றும் பி.எம். சுந்தரம் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘’பாடகி பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது. இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்டது ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம். தமிழ்நாட்டில் முதல்வரே வேந்தராக இருக்கும் பல்கலைக்கழகம் இதுதான். நான் அரசியல் பேசுவதாக யாரும் நினைத்து கொள்ள வேண்டாம்.

முதல்வர்கள் பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக இருந்தால்தான் பல்கலைக்கழங்கள் வளர முடியும், வளரும்; மற்றவர்களின் கையில் இருந்தால் அதன் நோக்கமே சிதைந்து போய்விடும் என்பதற்காகத்தான் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என 2013ம் ஆண்டே அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அவரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

கல்வி பொதுவான பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றினால்தான் அனைவருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர் கல்வி என மாற்ற முடியும். அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் எனக் கூறி, அதற்கான சட்ட முன்வடிவுகளை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளோம். இதுத் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம்’’ என கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...


மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது... 4 மணி நேரம் அவகாசம் தர்றேன்... நடிகர் சங்கத்தை எச்சரித்த மன்சூர் அலிகான்!

உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ

பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in