முதல்வர் ஸ்டாலினை மிகவும் வாழ்த்துகிறேன்: இளையராஜா திடீர் பாராட்டு ஏன்?

முதல்வர் ஸ்டாலினை மிகவும் வாழ்த்துகிறேன்: இளையராஜா திடீர் பாராட்டு ஏன்?

பாரதியாரின் நினைவு நாள் மகாகவி நாளாக அறிவித்த தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இன்று மகாகவி நாள் அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து இசையமப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," எல்லா வருடமும் இந்த நாளில் எனக்கு பாரதியார் நினைவு வரும். அந்த நினைவு வந்து என்னை வருத்தும். என்னைப் பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, நிலச்சுமையென வாழ்ந்திடும் புரிகுவையோ என அவன் தன்னை தானே நொந்து கொண்டது. நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என பாரதியார் பாடிய பாடல்கள் என்னை மிகவும் வருத்தியது.

அதற்காகவே பாரதியாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக என்னுடைய திரைப்பட பாடல்களில் அவருக்கு நான் பதில் சொல்லி உள்ளேன். 'உன் குத்தமா என் குத்தமா' என்ற பாடலில் 'வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசை உண்டு' என பாரதியாருக்கு நான் ஆறுதல் சொல்லியுள்ளேன். பாரதி கலங்குவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நாட்டிற்காக அவன் எப்படி எல்லாம் கற்பனை செய்து இருக்கிறான் என்றால் அது வியக்கக்கூடியதாக உள்ளது. ஏனெனில் வேறு யாருக்கும் வராத கற்பனை அவருக்கு வந்துள்ளது. நதிகள் இணைப்பு திட்டத்தை அவன் அப்போதே கற்பனை செய்து இருக்கிறான்.அந்தப் பாடலை பாடும்போது அவனுக்கு 25 வயது இருக்குமா? அப்போதே அவன் இதை கற்பனை செய்து இருக்கிறான்.

இன்று அவன் இருந்திருந்தால் காலத்தால் கற்பனை செய்ய முடியாத ஒன்று. அவனை நாம் இன்று நினைத்து மரியாதை செலுத்துவது ஒப்பற்ற விஷயம் அது நமக்கு புண்ணியத்தைச் சேர்க்கும். பாரதியாரின் நினைவு நாளை அவரது பெயர் சொல்லி அழைக்க தமிழக அரசு உத்தரவிட்டது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாரதியாரின் பெயர் சொல்லி இந்த நாளை அழைப்பது தமிழ் சமூகத்திற்கு செய்யும் பெருமை எனப் பேசினார். அதோடு தமிழக அரசு வாழ்க, முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க அவரை நான் மிகவும் வாழ்த்துகிறேன்" என இளையராஜா பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in