ஒருவரின் வேட்புமனு நிராகரிப்பு: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அதிரடி திருப்பம்

ஒருவரின் வேட்புமனு நிராகரிப்பு: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அதிரடி திருப்பம்

காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் கார்கே மற்றும் சசி தரூர் இடையே போட்டி உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி அறிவித்தார். திரிபாதியை முன்மொழிந்தவர்களில் ஒருவரின் கையொப்பம் பொருந்தவில்லை என்றும், மற்றொரு முன்மொழிபவரின் கையொப்பம் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வேட்பு மனுத்தாக்கலில் கடைசி நாளான நேற்று காங்கிரஸ் தலைமையின் ஆதரவைப் பெற்ற மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜி-23 குழுவைச் சேர்ந்த சசி தரூர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். யாரும் எதிர்பாராத விதமாக திரிபாதியும் வேட்புமனுத்தாக்கல் செய்தார்

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மிஸ்திரி, “வேட்புமனுத் தாக்கலின் போது மொத்தம் 20 படிவங்கள் பெறப்பட்டது. இதில் கார்கே 14 படிவங்களையும், தரூர் ஐந்து படிவங்களையும், திரிபாதி ஒரு படிவத்தையும் சமர்ப்பித்தனர். மொத்தம் 20 படிவங்களில் நான்கு படிவங்களை கையொப்ப பிரச்சனை காரணமாக ஆய்வுக் குழு நிராகரித்தது. வேட்புமனுவை வாபஸ் பெற அக்டோபர் 8 வரை அவகாசம் உள்ளது. யாரும் வாபஸ் பெறவில்லை என்றால், வாக்குப்பதிவு செயல்முறை தொடங்கும்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in