நாகர்கோவிலில் 6-ம் தேதி தோள் சீலை மாநாடு: தமிழக, கேரள முதல்வர்கள் பங்கேற்பு

ஸ்டாலின், பினராயி விஜயன்.
ஸ்டாலின், பினராயி விஜயன்.நாகர்கோவிலில் 6-ம் தேதி தோள் சீலை மாநாடு: தமிழக, கேரள முதல்வர்கள் பங்கேற்பு

நாகர்கோவிலில் வரும் 6-ம் தேதி தோள் சீலைப்போராட்டத்தின் இருநூறாவது ஆண்டு நினைவாக ' தோள் சீலை மாநாடு' நடைபெறுகிறது. இதில் தமிழக, கேரள முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தொடக்கக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. அப்போது சாதிய பாகுபாடுகளும், அடக்குமுறைகளும் அதிகளவில் இருந்தது. அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடந்தன. குறிப்பாக குறிப்பிட்ட சமூகப் பெண்கள் மேல் சீலை அணியவும், மேற்கூரை வைத்த வீடு கட்டவும் கூட தடை இருந்தது.

கடந்த 1822-ம் ஆண்டு இதற்கு எதிராக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதன்முதலில் போராட்டம் வெடித்தது. ஆன்மிக ரீதியில் இதில் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமிகள் நிறைய மறுமலர்ச்சிகளைச் செய்தார். சுவாமிதோப்புப் பகுதியில் சமத்துவக் கிணறு வெட்டினார்.

1822-ம் ஆண்டு தோள் சீலைப் போராட்டம் தொடங்கியதன் 200வது ஆண்டை கெளரவிக்கும்வகையில், நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் பொதுக்கூட்டத்தை நடத்த திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in