பிரதமர் மோடி தாயார் மறைவு: இளையராஜா இரங்கல்

பிரதமர் மோடி தாயார் மறைவு: இளையராஜா இரங்கல்

பிரதமரின் தாயாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத தாய் என இசையமைப்பாளர் இளையராஜா தனது இரங்கல் மடலில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு இடங்களில் மோடி தாயாரின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இசையமைப்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல் மடலில், " பிரதமர்  நரேந்திர மோடியின் தாயார் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த  துயரமும் வருத்தமும் அடைந்தேன். பிரதமரின் தாயாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத  தாய். எனது தாயாரும் அவ்வாறே. என்னிடம் எதையும் கேட்டதில்லை.  நானும் எதுவுமே கொடுத்ததில்லை.
இப்படிப்பட்ட அன்னையர்களை  உலகில் வேறெங்கும் காணமுடியுமோ?
அவர் மறைந்தது துயரமே. நமது பிரதமரின்  துயரத்தில் நான்
பங்கு கொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in