ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிரடியாக நிபந்தனை ஜாமீன்: என்ன தெரியுமா?

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிரடியாக நிபந்தனை ஜாமீன்: என்ன தெரியுமா?

அதிமுக அலுவலக மோதல் தொடர்பான வழக்கில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 64 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக நிபந்தனை விதித்து முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இது தொடர்பாக ராயப்பேட்டை காவல்துறையினர் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் மீது, கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஈபிஎஸ் ஆதரவாளர்களான தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 43 பேரும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், முன்ஜாமீன் கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 64 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், 64 பேருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியதோடு, அனைவரும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்றும் தலா 20,000 அடையார் புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in