சர்ச்சை... சாரட் வண்டியில் கே.எஸ். அழகிரி; 14 வயது சிறுவன் இழுத்து வந்த துயரம்!

சர்ச்சை... சாரட் வண்டியில் கே.எஸ். அழகிரி; 14 வயது சிறுவன் இழுத்து வந்த துயரம்!

8-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் சாரட் வண்டியை இழுத்து வர, அதன் மீது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அமர்ந்து வந்த காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியை, அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துச் சென்றனர். இரட்டை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அழகிரி கம்பீரமாக அமர்ந்து சென்றார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in