அவங்கள பிடிச்சு உள்ளே போடுங்க ஸார்?: பழ.நெடுமாறன் இப்படி ஆத்திரப்பட காரணம் என்ன?

அவங்கள பிடிச்சு உள்ளே போடுங்க ஸார்?: பழ.நெடுமாறன் இப்படி ஆத்திரப்பட காரணம் என்ன?

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் காரை சூழ்ந்து கொண்டு பாஜகவினர் தாக்கியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவரை அவமதிக்கும் இந்த அநாகரிகமான போக்கில் ஈடுபட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்," நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்துள்ள இந்தியப் படை வீரர் லட்சுமணன் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்ட போது அந்த புனிதமான நிகழ்ச்சியில் கண்ணியக் குறைவாகவும், அநாகரிகமாகவும் நடந்து கொண்டது மட்டுமல்லாமல் அந்த தியாக வீரரின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் அஞ்சலி செலுத்த வந்திருந்த நிதியமைச்சரின் காரையும் சூழ்ந்து கொண்டு பாஜகவினர் தாக்கியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவரை அவமதிக்கும் இந்த அநாகரிகமான போக்கில் ஈடுபட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in