ஏப்ரல் முதல் சொத்து வரி விதிக்கும் முடிவு: ஜம்முவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

ஜம்மு காஷ்மீர் சொத்து வரி
ஜம்மு காஷ்மீர் சொத்து வரிஏப்ரல் மாதம் முதல் சொத்து வரி விதிக்கும் முடிவு: ஜம்முவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

ஜம்மு யூனியன் பிரதேசத்தில் சொத்து வரி விதிப்புக்கு எதிராக இன்று முழு கடையடைப்பு நடத்தப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் அரசு ஏப்ரல் முதல் சொத்து வரி விதிக்க முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவின்படி, குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் இன்று அழைப்பு விடுத்துள்ள பந்த்தினை பல அமைப்புகளும் ஆதரிக்கின்றன. எனவே, ஜம்முவில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்று முழுமையாக மூடப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து நீதிமன்றங்களிலும் தனது பணியை புறக்கணித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சொத்து வரி விதிப்புக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக கூட இந்த வரிவிதிப்பு முடிவில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் விலகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் சர்ச்சைக்குரியதாக மாறிய நிலையில், ஏப்ரல் முதல் சொத்து வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாமல் உள்ளது. மேலும், லெப்டினன்ட் கவர்னரின் நிர்வாகம் எடுக்கும் இத்தகைய முடிவுகளை மக்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். இது தொடர்பாகப் பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, மக்கள் பிரதிநிதித்துவம் பெற்ற அமைப்பு இல்லாமல் வரிவிதிப்பு இருக்க முடியாது என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in