பி.சி.ஆர் சட்டத்தில் கைதாவாரா அண்ணாமலை?- நெல்லை காவல் ஆணையரிடம் புகார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நெல்லை மாநகர காவல் ஆணையரிடம், நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த முருகன் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதிலும் அண்ணாமலை மீது பி.சி.ஆர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். இது பாஜகவினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து புகார் கொடுத்திருக்கும் முருகன் கூறுகையில், “பாஜக தலைவர் அண்ணாமலையின் ட்விட்டர் பக்கத்தை நான் தொடர்ந்து பார்த்துவருகிறேன். அவரது ட்விட்டர் பக்கத்தின் பாலோவர்ஸ்களில் ஒருவராகவும் நான் உள்ளேன். நேற்று பிரதமர் மோடியை வாழ்த்தி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார் அண்ணாமலை. அதில், from a pariah to viswa guru என்ற வார்த்தையை பதிவு செய்துள்ளார். இந்த பறையா என்னும் சொல்லுக்கு உலக அளவில் ஒடுக்கப்பட்ட, கீழானவர்கள் என்ற அர்த்தத்தில் பொருள் கொள்ளப்படுகிறது. சாதியை இழிவுப்படுத்தும் வகையில் அண்ணாமலை வேண்டுமென்றே பதிவிட்டுள்ளார்.

சட்டப்படி பறையா என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது. ஆனால் அண்ணாமலை தொடர்ந்து அதனைப் பயன்படுத்தி வருகிறார். அதனால் தான் அதைக் கண்டித்து நெல்லை மாநகர ஆணையரிடம் புகார் கொடுத்தேன். நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் உத்தரவிட வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in