ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்: டிஜிபியிடம் கோரிக்கை வைத்தார் ஜெயக்குமார்!

டி. ஜெயக்குமார்
டி. ஜெயக்குமார்ஓபிஎஸ் தரப்புக்கு ’செக்’ வைக்கும் ஜெயக்குமார்!

அதிமுக பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தும் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் துறை தலைவரிடம் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மனு அளித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையமும் அதனை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி, ஓபிஎஸ் தரப்பினர் நாங்கள் தான் உண்மையான அதிமுக என மல்லுக்கட்டி வருகின்றனர். இந்த நிலையில், சேலத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இத்தகைய சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பினர் கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘’அதிமுகவின் பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டு அவரின் கண்காணிப்பில் கட்சி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இதனால் சேலத்தில் மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்க மாட்டோம் என ஓபிஎஸ் தரப்புத் தான்தோன்றித்தனமாக கட்சி பெயரை, சின்னத்தை பயன்படுத்தி வருகிறது. இது சட்டவிரோதம். சேலம் சம்பவம் தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றம் செல்வோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in