திமுக மாவட்ட செயலாளர் மீது எஸ்.பி அலுவலகத்தில் பாஜக புகார்: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்

திமுக மாவட்ட செயலாளர் மீது எஸ்.பி அலுவலகத்தில் பாஜக புகார்: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்

நாகர்கோவிலில் நடந்த திமுக இந்தி எதிர்ப்பு விளக்கப் பொதுக்கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மேயருமான மகேஷ் பாஜகவினர் குறித்து பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சார்பில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

நாகர்கோவிலில் நடந்த இந்தி எதிர்ப்பு விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு திமுகவினர் கட்சிக் கொடிகளைக் கட்டி இருந்தனர். அதற்கு ஊடாக பாஜகவினரும் அவர்கள் கட்சிக் கொடிகளைக் கட்டி திமுகவினரைக் கடுப்பேற்றினார்கள். இதையடுத்து, நாகர்கோவில் திமுக மேயரான மகேஷ் தானே களத்துக்குப் போய் பாஜக கொடிகளை அகற்றினார். உடனே இந்த விவகாரத்தை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போனார்கள் பாஜகவினர்.

அப்படியும் உஷ்ணம் குறையாத மகேஷ், மேடையில் பேசும்போது, “நான் மாவட்ட செயலாளர் ஆகவும், மேயர் ஆகவும் இருக்கும்பகுதியில் பாஜகவினர் எங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கையையோ, தலையையோ நீட்டினால்...” என பேச்சை நிறுத்திவிட்டு ‘தலையைச் சீவிவிடுவேன்’ என்பது போல் செய்கை செய்தார். இதைக் கேட்டு திமுகவினர் ஆர்ப்பரிக்க, மகேஷ் செய்கை காட்டியதை வீடியோ எடுத்த ஒருவர், அதை அப்படியே சமூகவலைதளத்தில் போட்டு வைரலாக்கிவிட்டார்.

இந்த பேச்சு வைரலானதைத் தொடர்ந்து பாஜகவின் நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் பாஜகவினர் கோட்டாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மாலை திமுக மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் மீது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ தலைமையில் பாஜக நிர்வாகிகள் எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதிலும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை முதல் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் பாஜக அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in