`கேவலப்படுத்தும் விதமாக பேசி வருகிறார்'- அண்ணாமலைக்கு எதிராக சென்னை காவலர் ஆணையரிடம் புகார்

`கேவலப்படுத்தும் விதமாக பேசி வருகிறார்'- அண்ணாமலைக்கு எதிராக சென்னை காவலர் ஆணையரிடம் புகார்

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை கொருக்குப்பேட்டை கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் ஆர்டிஐ செல்வம். சமூக ஆர்வலரான ஆர்.டி.ஐ செல்வம் இணையதளம் வாயிலாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதாகவும், யாராவது பாஜக குறித்து விமர்சித்து பேசினால் அவர்களை அழிப்பேன் என்று பொதுவெளியில் வெளிப்படையாக பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கடந்த 27-ம் தேதி சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர்களை கேவலப்படுத்தும் விதமாக உள்நோக்கத்துடன் தொடர்ந்து அவமதிக்கும் விதத்தில் அண்ணாமலை செயல்பட்டு வருவதாகவும், இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in