'புதுச்சேரி தொகுதி எங்களுக்கு வேண்டும்'.. பாஜக பிடிவாதத்தால் முதல்வர் ரங்கசாமி தவிப்பு!

முதல்வர் ரங்கசாமியை சந்தித்த பாஜக நிர்வாகிகள்
முதல்வர் ரங்கசாமியை சந்தித்த பாஜக நிர்வாகிகள்
Updated on
1 min read

புதுச்சேரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் வலியுறுத்திவரும் நிலையில் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று  பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. 

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் ரங்கசாமி
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் ரங்கசாமி

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதனிடையே கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தலைமையில் பாஜக நிர்வாகிகள், முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடம் ஆலோசனை நடத்தினார், அப்போது  புதுச்சேரியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம்  அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

முதல்வர் ரங்கசாமி
முதல்வர் ரங்கசாமி

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவருமே என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் தான் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். 

புதுச்சேரியில் பாஜக என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வரும் நிலையில்  முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்து தங்களுக்கு வேண்டிய அனைத்தையும் பாஜக பெற்று வருகிறது.  அந்த வகையில் மக்களவைத் தொகுதியையும்  பாஜகவே பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுத்து வருவதால் முதல்வர் ரங்கசாமி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in