சென்னை மாநகராட்சிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டம்!

கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்சென்னை மாநகராட்சிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டம்!

சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற சாலையோர கடைகளை சட்டத்திற்கு புறம்பாக அதிகாரிகள் அகற்றுவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் சென்னை மாநகராட்சியின் அனுமதியை பெற்று சாலையோர கடைகளை நடத்திவர்களை எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனைக் கண்டிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’ சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கிய இடத்தில் தான் கடைகளை நடத்தி வருகின்றனர். ஆனால் யாரோ ஒரு சிலருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டு கடைகளை அப்புறப்படுத்துகின்றனர்.

அதிகாரிகளின் அராஜகப் போக்கு குறித்து மாநகராட்சியிடம் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடைகளை அப்புறப்படுத்த உரிய கால அவகாசமும் வியாபாரிகளுக்கு கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும்’’ என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in