கதாநாயகனாகும் முத்தரசன்... விவசாயி கதாபாத்திரத்தில் கலக்கல்

விவசாயி கதாபாத்திரத்தில் படப்பிடிப்பில் முத்தரசன்
விவசாயி கதாபாத்திரத்தில் படப்பிடிப்பில் முத்தரசன்
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஒரு திரைப்படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துவரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சிறு வயது முதலே மிக தீவிரமாக ஈடுபட்டு வருபவர் முத்தரசன்.  அவரது உழைப்பின் பயனாக அவர் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். மிக எளிமையானவராக அறியப்படும் முத்தரசன் பழகுவதற்கு இனிமையானவர்,  வெகு இயல்பாக மக்களிடம் கலந்து பழகக் கூடியவர்.

அப்படிப்பட்டவர் திரைப்படம் ஒன்றில்  நடித்து வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விவசாயத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் அரிசி என்ற திரைப்படத்தை விஜயகுமார் என்பவர் எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 35 நாட்களாக நடந்து வருகிறது.  

முத்தரசன்
முத்தரசன்

உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பியுள்ள முத்தரசன் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விவசாயியாக நடிக்கும் அவர் பங்கேற்கும் காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் ரஷ்யா மாயன், சிசர் மனோகர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.  இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். விவசாயி கதா பாத்திரத்தில் முத்தரசன் தோற்றம் வெளியாகி பலரிடமும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in