முத்தரசனின் உடல்நிலை சீராகவும், இயல்பாகவும் உள்ளது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தகவல்

முத்தரசன்
முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன்  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில  செயலாளர்  இரா.முத்தரசன் (72). பொதுவாகவே சுறுசுறுப்பாக செயல்படுபவரான  முத்தரசன் மாநில  செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல் பாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது  முத்தரசனுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து சென்னை அரசினர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் பெரியசாமி இதுகுறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கடந்த இரண்டு நாட்களாக கடுமையான சளி, இருமல் இருந்தது. அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், கோவிட் 19 பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டொரு நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்றபடி அவரது உடல்நிலை சீராகவும், இயல்பாகவும் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in