பெரியாறு அணை எப்படி இருக்கும் என்றுகூட தெரியாதா மார்க்சிஸ்ட்களுக்கு?

வலைதளத்தில் பரவும் சர்ச்சை
முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கண்டித்து தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் போராட்டம் நடத்தின. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தாமல் உபரிநீராக தண்ணீரை கேரளத்துக்குத் திறந்துவிடுகிறது கம்யூனிஸ்ட் அரசு. அதைத் திமுக அரசு தட்டிக்கேட்காமல், மாநில உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டது என்று அக்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில் தொடர்மழை காரணமாகவும், ரூல் கர்வ் விதி அனுமதித்தாலும் இன்று அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.

இவ்வளவு காலமாக இப்பிரச்சினை குறித்து மவுனம் சாதித்த தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இப்போது இது தொடர்பாகப் பேசத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, அக்கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கேரள இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் முல்லை பெரியாறு அணையில் 4-வது முறையாக நேற்று 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது’ என்று தனது முகநூலில் பதிவிட்டார்.

அதை அப்படியே 'போட்டோஷாப்' செய்து, தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில், முல்லை பெரியாறு அணைக்குப் பதிலாக தவறுதலாக இடுக்கி அணையின் படம் இடம்பெற்றுள்ளது.

இதை எடுத்து வைத்துக்கொண்டு பாஜக மற்றும் தமிழ் தேசியவாதிகள், "கம்யூனிஸ்ட்களின் விவசாயிகள் சங்கத்தினருக்கு பெரியாறு அணை எப்படியிருக்கும் என்பதுகூட தெரியவில்லை போல. இவர்கள் எல்லாம் எப்படி தமிழக விவசாயிகளின் உரிமை குறித்துப் பேசுவார்கள்" என்று கேலி செய்துவருகின்றனர்.

மேலும், "அணை நிரம்பியது இன்று அதிகாலையில்தான். நேற்றே நிரம்பியதாகச் சொல்வது உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தமிழகம் மீறியதாகத் தவறான தகவலைப் பரப்புவதற்கு ஒப்பானது" என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in