'இறைவனின் சொத்துக்களைக் காப்பாற்றி பாதுகாத்து வருகிறோம்’ : அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு'இறைவனின் சொத்துக்களைக் காப்பாற்றி பாதுகாத்து வருகிறோம்’ : அமைச்சர் சேகர்பாபு

இறைவனுக்கு சொந்தமான கோயில் சொத்துகளை பாதுகாத்து காப்பாற்றி வருகிறோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லைக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் 1,00,001-வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியினை தொடங்கி வைத்து, எல்லைக் கற்களை நட்டு வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் மொத்த பரப்பு 5,42,429.32 ஏக்கராகும். இதில்  வருவாய் துறை ஆவணங்களோடு முழுமையாக ஒத்துபோகும் நிலங்களின் பரப்பு 3,43,000 ஏக்கராகும். மீதியுள்ள நிலங்களின் பரப்பு 1,99,429.32 ஏக்கராகும். 

திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்வதற்கான முதல் நடவடிக்கையாக உரிமம் பெற்ற நில அளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு, 20 மண்டல இணை ஆணையர்களின் நேரடி கட்டுப்பாட்டில் பணியமர்த்தப்பட்டனர்.

பல இடர்பாடுகளுடைக்கிடையே சிறப்பாக பணியாற்றி இறைவனின் சொத்துக்களைக் காப்பாற்றியும், பாதுகாத்தும் வருகிறோம்" என்றார். மேலும் " 2023-ம் ஆண்டிற்குள் 2 லட்சம் ஏக்கராக அளவீடு செய்து உயர்த்தி காட்டுங்கள். உங்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, 172 நில அளவர்களையும்,20 மண்டலத்தைச் சேர்ந்த மண்டல தலைவர்களையும் மனதார பாராட்டுகிறேன்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in