‘இதுக்கே கண்ணக் கட்டுதே..!’

இதுக்கே கண்ணக் கட்டுதே...
இதுக்கே கண்ணக் கட்டுதே...ஓவியம்: வெங்கி

ரெய்டுகள், கைதுகள், பெட்ரோல் குண்டுகள், கருப்புக் கொடிகள் என தமிழக அரசியல் களம் தகிப்பில் இருந்தாலும் அவ்வப்போது நகைச்சுவை குளிர்ச்சியும் அடைவது உண்டு. 

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அப்படித்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில், ‘‘எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளராக வருவதற்குக்கூட வாய்ப்பு உண்டு’’ என்றார். அதை ஆமோதித்த அவரது சகாவான செல்லூர் ராஜூவும், ‘‘பிரதமராவதற்கு எல்லா தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு’’ என்று குபீர் கிளப்பினார். செல்லூராரின் உள்ளூர் பங்காளியான ஆர்.பி. உதயகுமாரும் ‘‘கிங் மேக்கராக எடப்பாடியார் விளங்குவார்’’ என்று சிரித்தபடி சொன்னார்.

இதுபற்றி கோவையில் செய்தியாளர்கள் கொக்கி போட்டபோது பாஜக தலைவர் அண்ணாமலை நிஜமாகவே சிரித்தார். ‘‘சிரிப்புதான் எனது பதில்’’ என்று கூறியதோடு, ‘‘அண்ணா.. எல்லோரும் கனவு காணலாம்ணா’’ என்று சொல்லி செய்தியாளர்களையும் சிரிக்க வைத்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

சிவனே என காளையார்கோவிலுக்கு மருதுபாண்டியர் குருபூஜைக்கு அஞ்சலி செலுத்த வந்த ஓபிஎஸ்சிடமும் செய்தியாளர்கள் இதே கேள்வியைக் கேட்டு துளைத்தனர். நல்ல வெயில் நேரம். செய்தியாளர்களின் கேள்விக் கணைகள். கேள்வியோ எடப்பாடியார் பிரதமர் வேட்பாளர் பற்றி... பன்னீர்செல்வம் எதை மனதில் வைத்துச் சொன்னாரோ தெரியவில்லை... “தலையே சுத்துது‘‘ என்று மொத்தமாக சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

போற போக்குல பொத்தாம் பொதுவுல சொல்லிட்டுப் போனதுக்கே இப்படி தகிக்கிது... தலசுத்துது... இன்னும் பொலிட்பீரோ கூடி தீர்மானம் போட்டிருந்தா..?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in