மாணவர்களே, உங்கள் ஊர் அருகிலேயே கல்லூரி வருகிறது: அமைச்சர் ஹேப்பி நியூஸ்

மாணவர்களே, உங்கள் ஊர் அருகிலேயே கல்லூரி வருகிறது: அமைச்சர் ஹேப்பி நியூஸ்
அமைச்சர் பொன்முடி

கல்லூரி படிப்பிற்காக 20 கி.மீ தொலைவிற்கு மேல் சென்று படிக்கும் மாணவர்களுக்கு அப்பகுதியிலேயே புதிய கல்லூரி தொடங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

கடந்த 7-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில் பேசிய பொன்முடி, “அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் மாணவர்களுக்கு நேரடியாக கலந்தாய்வு நடத்துவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். மேலும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மொத்தமாகக் கலந்தாய்வு நடத்தும் திட்டம் இல்லை. கல்லூரி படிப்பிற்காக 20 கி.மீ தொலைவிற்கு மேல் சென்றுதான் மாணவர்கள் படிக்கும் நிலை உள்ளது. மாணவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதி அருகிலேயே புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.