மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்... பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது!

மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவ - மாணவிகள்
மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவ - மாணவிகள்

கோவையில் மோடி ரோடு ஷோவில் மாணவ - மாணவியரைப் பங்கேற்க வைத்த பள்ளி நிர்வாகம் மீது ஏப்ரல் 3-ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் மோடியின் ரோடு ஷோ- உடன் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை
கோவையில் மோடியின் ரோடு ஷோ- உடன் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை மற்றும் சேலத்தில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடந்த 18-ம் தேதி கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பள்ளிச் சீருடையில் மாணவ - மாணவிகளும் பங்கேற்றது சர்ச்சையானது.

விசாரணையில், பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பங்கேற்றது சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவி பெறும் ஸ்ரீ சாய் பாபா வித்யாலயம் நடுநிலைப் பள்ளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பள்ளி மீது கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி சீருடையில் 32 மாணவ - மாணவிகள் பங்கேற்றதாக கூறுவதும், அவர்களை கட்டாயப்படுத்தி ரோடு ஷோவில் பங்கேற்க வைத்ததாக கூறுவதும் தவறான குற்றச்சாட்டு. ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் பங்கேற்றதில் பள்ளி நிர்வாகத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது. அதனால் பள்ளி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரப்பட்டது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

இந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “இந்த வழக்கு தொடர்பாக சாய்பாபா காலனி காவல் ஆய்வாளர் ஏப்ரல் 3-ம் தேதி பதலளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவரை பள்ளி நிர்வாகம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...  

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in