6வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்... கோவை மாநகரில் தேங்கி கிடக்கும் குப்பைகள்!

கோவை மாநகரில் மலை போல் குவிந்துள்ள குப்பைகள்
கோவை மாநகரில் மலை போல் குவிந்துள்ள குப்பைகள்

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தம் 6வது நாளாக தொடர்வதால், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.

அரசு ஒதுக்கீடு செய்த கூலி 721 ரூபாய் தினசரி ஊதியத்தை வழங்க கோரி, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக வஉசி மைதானத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆறாம் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 6வது நாளாக போராட்டம்
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 6வது நாளாக போராட்டம்

சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் இதில் பங்கேற்று கூலி உயர்வு வழங்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் எங்கே எனவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகரில் மலை போல் குவிந்துள்ள குப்பைகள்
கோவை மாநகரில் மலை போல் குவிந்துள்ள குப்பைகள்

500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதால் ஆயுத பூஜை, விஜயதசமி, சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகை தினங்களில் மாநகரில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


குட்நியூஸ்... பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?

நெகிழ்ச்சி... மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்!

பாலின சமத்துவம்... பெண்கள் வேலைநிறுத்தம்... ஆதரவு தெரிவித்து பிரதமர் பணி புறக்கணிப்பு!

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா... தஞ்சை பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்!

பிக் பாஸ்7: வைல்ட் கார்டில் நுழையும் அந்த ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தானா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in