அதிமுக நிர்வாகிகளை கூண்டோடு தூக்கிய செந்தில் பாலாஜி: அடுத்த டார்கெட் 2 எம்எல்ஏக்கள்?

கோவை மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் சி.பி.மீனாட்சி
கோவை மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் சி.பி.மீனாட்சி

கோவையை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். அடுத்து அதிமுக எம்எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகுதி செயலாளர் பி.ஜி.ஸ்ரீதர்
பகுதி செயலாளர் பி.ஜி.ஸ்ரீதர்

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சூலூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக வெற்றி பெறவில்லை. அதிமுக 9 தொகுதிகளையும், பாஜக ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை திமுகவினர் மீது கடும் கோபம் காட்டினார். இதைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியை கொடுத்து கோவையில் களமிறக்கினார் ஸ்டாலின்.

இவரது பணியை மெச்சும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு விழாவிலும் செந்தில் பாலாஜியை பற்றி பேசி வருகிறார். அண்மையில் விழா ஒன்றில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, நலத்திட்ட விழா தொடர்பாக முதல்வரிடம் நேரம் கேட்டால் இரண்டு நாட்களுக்கு பிறகுதான் கிடைக்கும். ஆனால், அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கோ உடனே முதல்வர் தேதி கொடுத்து விடுகிறார் என்று கூறியிருந்தார். அதேபோலத்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார்.

கோவை காந்திபுரம் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி. லோகஸ்ரீ
கோவை காந்திபுரம் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி. லோகஸ்ரீ

கோவை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக, 748 புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 228 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்துள்ளார். மேலும், 663 கோடி மதிப்பளவில் 748 புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின் 271.25 கோடி மதிப்பளவில் 228 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். இதனிடையே, பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ, அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து திமுகவில் இணைவதாக கூறியுள்ளார். இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் சி.பி.மீனாட்சி, பகுதி செயலாளர் பி.ஜி.ஸ்ரீதர், கோவை காந்திபுரம் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி. லோகஸ்ரீ ஆகியோர் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேரும், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்த இணைப்பு விழா நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் அனைத்து தாெகுதிகளையும் இழந்த திமுக, அமைச்சர் செந்தில் பாலாஜியை வைத்து காேவை அதிமுக கூடாரத்தை காலி செய்து வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in