100 நாள் வேலை திட்டம்... மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,697 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுத் தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்பது கிராமப்புறங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான முக்கியமான திட்டங்களில் ஒன்று.

இந்த திட்டம் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்பு வழங்குவதோடு கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்திட ஏதுவான மற்றும் கிராம மக்களின் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்திடும் ஒரே திட்டமாகும்.

100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள்
100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு அளவுகோல்களின் கீழ் தமிழ்நாடு எப்போதும் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் 92.86 லட்சம் குடும்பங்களுக்கு பணி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 76.15 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 91.52 லட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசால் ஒப்பளிக்கப்பட்ட தொகையில் ரூ.418.23 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள ரூ.1,337.20 கோடி இன்னும் தொழிலாளர் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள்
100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in