‘மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றி, மக்களே!’

முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
‘மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றி, மக்களே!’
முதல்வர் மு.க.ஸ்டாலின்கோப்புப் படம்

நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை விளக்கும் வகையிலும் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த திமுக தலைமை முடிவுசெய்தது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், இன்று நடந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு என் மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

நிதிநிலை அறிக்கை குறித்து பேசிய முதல்வர், “கழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ள திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும்போது தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக, இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக மாறும். ஒரு தாய்க்கு மட்டுமே பிள்ளைக்கு என்ன வேண்டும் என்பது தெரியும். தன்னிடம் படிக்கும் பிள்ளைகள் தலைசிறந்த நிலையை அடைய வேண்டும் என்ற அக்கறை ஒரு ஆசிரியருக்குத்தான் இருக்கும். சிறந்த அறிவுரையை, தன்னை நாடி வருபவர்களுக்கு சொல்லும் திறன், கூர்மையான வழிகாட்டிக்கு மட்டுமே இருக்கும். ஒரு சீர்திருத்தவாதிதான் மனித சமுதாயத்துக்கு எது தேவை என்று யாருக்கும் பயப்படாமல் சொல்வார். இந்த நான்கு நன்மைகளும் கொண்டதாக கழக நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.