விரைந்து குணமாகி பொதுப்பணிகளைத் தொடர வேண்டும்: கரோனா பாதித்த ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

ஸ்டாலின்
ஸ்டாலின்

கரோனா தொற்றில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், அவர் கரோனாவில் இருந்து பூரணநலம் பெற வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், " தமிழக முதல்வர் ஸ்டாலின் அயராது தமது பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிற நிலையில் இன்று கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து இருக்கிறார். அவர் விரைவில் பூரண நலம்பெற்று தனது மக்கள் நலப்பணிகளைத் தொடர வேண்டுமென விழைகிறேன் " என்று கூறியுள்ளார்.

எல்.முருகன்.
எல்.முருகன்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று ஏற்பட்ட செய்தி வருத்தம் அளிக்கிறது. எல்லாம் வல்ல கந்தனின் ஆசியால் அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்குத் திரும்ப இறைவனை வேண்டுகிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை.
அண்ணாமலை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

சீமான்.
சீமான்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழுஉடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன்.
டி.டி.வி.தினகரன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கரோனா தொற்றின் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள முதல்வர் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in