முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்!

ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்
ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்

அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். 

ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்
ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்
கடந்த ஜனவரி 27-ம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயினுக்குச் சென்றார். இவருடன் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் சென்றிருந்தார். அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்திற்கு தொழில் தொடங்க வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், " தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப். டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். இந்தியாவின் உற்பத்தி தமிழ்நாட்டில் உள்ள எல்லையற்ற வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது.

ஒப்பந்தங்கள் கையெழுத்து
ஒப்பந்தங்கள் கையெழுத்து

நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டேன். அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்” எனத் தெரிவித்துள்ளார். 

ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் இன்று  காலை 8.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்து, தமிழகத்தில் செய்யப்படவுள்ள முதலீடுகள் குறித்த தகவல்களை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in