தமிழ்நாடு ஆளுநர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு: அதிமுக புறக்கணிப்பு

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்புதமிழ்நாடு ஆளுநர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு: அதிமுக புறக்கணிப்பு

சென்னையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். அதே நேரத்தில் அதிமுக தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளது பாஜகவினரை அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்து வருபவர் ஆளுநர் ரவி. அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது சில வார்த்தைகளை தவிர்த்து விட்டு தனது சொந்த கருத்தை அதில் திணித்தார் ஆளுநர். உடனே முதல்வர் ஸ்டாலின் எழுந்து ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததோடு, அவர் படித்த தன்னிச்சையான வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து அவை குறிப்பில் இருந்து ஆளுநரின் வார்த்தைகள் நீக்கப்பட்டன. ஆளுநரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதனால், தமிழக முதல்வருக்கும் ஆளுநருக்கும் நேரடியாக மோதல் போக்கு நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் இன்று ஆளுநர் ரவி தேநீர் விருந்து அளிக்க ஏற்பாடு செய்தார். இந்த தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள் கட்சிகள் புறக்கணித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்றுள்ள நிலையில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in