மகனைக் கட்டி அணைத்து முத்தமிட்டு வாழ்த்திய முதல்வர்: பிறந்தநாளில் அன்புப் பரிசு!

பழைய படம்
பழைய படம்

தனது 46-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தனது தந்தையும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலினிடம் ஆசி பெற்றார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

46-வது பிறந்தநாளைக் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின், ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் அவரைச் சந்தித்து ஆசி பெற்றார். முதல்வரும் தனது தந்தையுமான ஸ்டாலினுக்கு  மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி காலில் விழுந்து வணங்கினார் உதயநிதி. அவருக்குப் பட்டுத்துண்டு போர்த்தி கட்டி அணைத்து முத்தமிட்டு வாழ்த்து சொன்னார் தந்தை ஸ்டாலின். அதேபோல துர்கா ஸ்டாலினும் மகனைக் கட்டி அணைத்து தனது வாழ்த்தையும், அன்பையும் தெரிவித்தார். தனது தாய் தந்தை இருவருக்கும் நடுவில் நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உதயநிதி அப்போது தயாநிதி மாறன் உடன் இருந்தார்.

பிறகு சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்ற உதயநிதி, அங்குள்ள கருணாநிதி,  அண்ணா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பாடநூல் கழகத் தலைவர் லியோனி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று உதயநிதியை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in