மக்களவை தேர்தல் வரை ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று பிரதமர் உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பிரச்சாரம் செய்கிறார். ஆளுநரால்தான் திராவிட மாடல், பிரபலம் அடைகிறது. பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களின் பதவியே வேஸ்ட் தான்.
திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருப்பது தான் திராவிடம். தமிழ்நாட்டு மக்கள் ஆளுநரை பொறுப்படுத்தவில்லை. மக்களவை தேர்தல் வரையாவது ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என்று, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!
அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!
மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை
நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!
இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!