கடலூர், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு எப்போது?: முதல்வர் ஸ்டாலின் தகவல்

கடலூர், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு எப்போது?: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை மாநகராட்சியில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து, பணிகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம் 6-ல் இன்று ஆய்வைத் தொடங்கிய ஸ்டாலின், ஓட்டேரி, நல்லாப்பாலம், பல்லவன் சாலை வீட்டு வசதி வாரியம், 70 அடி சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.  ஓட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்குக் கொசுவலை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் பகுதியில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர். அந்தந்த மாநகராட்சி பகுதியில் உள்ள அதிகாரிகளும் ஆய்வின் போது உடனிருந்தனர்.

வெள்ளத் தடுப்புப் பணிகளின் நிலை குறித்துக் கேட்டறிந்த முதல்வர், மழை நீர் வெளியேற்றம், நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார். பொதுமக்களிடமிருந்து எந்த குறைகளும் வராதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கும். மழை முடிந்தபிறகு வடிந்து விடும். மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் நாளை ஆய்வு செய்ய உள்ளேன். அதற்காக இன்று இரவே புறப்பட்டுச் செல்ல உள்ளேன்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in