அமித் ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை... ஸ்டாலின் விமர்சனம்

அமித் ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை... ஸ்டாலின் விமர்சனம்

"ராமேஸ்வரத்தில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தாெடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை" என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக இளைஞர் நிர்வாகி கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பேசுகையில், "உள்துறை அமைச்சர் நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இனி ஒன்றிய அமைச்சர்கள் அடிக்கடி தமிழகம் வருவார்கள். அமித் ஷா தமிழகத்தின் ஒன்றிய அரசின் திட்டங்களை தொடங்கி வைக்க வந்தாரா? இல்லை. ஏற்கெனவே அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க வந்தாரா? இல்லை. ஏதோ பாத யாத்திரையை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். அது பாத யாத்திரை அல்ல, குஜராத்தில் 2002-ம் ஆண்டும், இப்போது மணிப்பூரில் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிற பாவ யாத்திரை. அது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை.

மத்திய ஒன்றிய உள்துறை அமைச்சரை பார்த்து கேட்கிறேன். இந்த இரண்டு மாதத்தில் பற்றி எரிந்த மணிப்பூருக்கு சென்று அமைதியை காக்க முடிந்ததா? முடியவில்லையே. அமைதியாய் இருக்கிற தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாதா? எந்த எண்ணத்தோடு பாத யாத்திரை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். திமுக குடும்ப கட்சி என்று பேசியிருக்கிறார் அமித் ஷா. கேட்டு கேட்டு புளித்துப் போன ஒன்று. நான் எவ்வளவோ பதில் சொல்லிவிட்டேன். வேற ஏதாவது மாத்தி சொல்லுங்க. பாஜக தலைவர்களின் வாரிசுகள் அரசியல் பதவியில் இல்லையா? எல்லோரும் நாளைக்கு காலையில் விலகி விடுவார்களா? பாஜகவில் வாரிசுகளின் மாநில பட்டியலை நான் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் ஆகும். அதனால் வேறு ஏதாவது புதுசா சொல்லுங்கள் அமித் ஷா அவர்களே" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in