தமிழகத்தில் புதிதாக 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்வு... முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளை விரிவாக்கம் செய்து மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான பணிகளை தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது 15 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை, கோவை, மதுரை, ஆவடி, ஓசூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், திண்டுக்கல், நாகர்கோவில், தஞ்சாவூர், ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூர் ஆகியவை மாநகராட்சிகளாக உள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சில நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது என தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

நகரமயமாக்கல் காரணமாக விரிவாகி வரும் நகரங்களின் பொருளாதார மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த முடிவு எடுய்க்கப்பட்டிருந்தது. இதன்படி தற்போது புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளை விரிவாக்கம் செய்து மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான பணிகளை தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’தற்போது நகராட்சிகளாக உள்ள இந்தப் பகுதிகளின் அருகில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கவும் அதன் நடைமுறைகளை தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் 28 புதிய நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்வதால், இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அந்த நகராட்சிகளின் பொருளாதார நிலை மேம்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நெல்லையப்பா் கோயிலில் கோலாகலம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு!

பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டாரா மம்தா பானர்ஜி? மருத்துவர்கள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு!

பயங்கரம்... பள்ளத்தாக்கில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

குறைந்த வட்டி விகிதம்... தங்க நகைக்கடன் வாங்க தங்கமான வங்கி எது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in