முதல்வர் போட்டோ ஷுட் நடத்த வெளிநாடு சென்றுள்ளார் - ஜெயக்குமார் விமர்சனம்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்முதல்வர் போட்டோ ஷுட் நடத்த வெளிநாடு சென்றுள்ளார் - ஜெயக்குமார் விமர்சனம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஷுட் நடத்துவதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளாரே தவிர, முதலீடுகளை ஈர்க்க அல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை பெரம்பூர் திரு வி க நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்  பார்வையிட்டார் அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர் பேசுகையில்,

’’அதிமுகவில் ஒன்றரை லட்சமாக உள்ள தொண்டர்களை எடப்பாடியார் தலைமையற்ற பிறகு 2 கோடி தொண்டர்களாக உயர்த்துவதற்கு தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை ஆங்காங்கே நடைபெற்ற வருகிறது. நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவில் எதிர் கட்சி தலைவர் கலந்து கொள்வதற்கு அழைப்பு வந்துள்ளது கலந்து கொள்வது குறித்து ஈபிஎஸ் முடிவெடுப்பார். 19 கட்சிகள் புறக்கணிப்பு குறித்து எங்களுக்கு தேவை இல்லை, எங்களுக்கு அழைப்பு வந்தது நாங்கள் கலந்து கொள்கிறோம்.

ஸ்டாலின் வெளிநாடு பயணம் போட்டோ ஷூட் செய்வதற்கு சென்றுள்ளாரே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்கு அல்ல. கொரோனா காலத்தில் கூட முதலீடு வந்தது எங்களது ஆட்சியில். ஆனால் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையொப்பமிடுவதற்கும் வெளிநாடு சென்றுள்ளதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார். ஸ்டாலின் காலையிலும் பொய் பேசுகிறார், மாலையிலும் பொய் பேசுகிறார். வாயை திறந்தாலே பொய் தான். அவர் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலை வழங்கினார்கள் என்று இவர்களால் கூற முடியுமா?

இவர்களது ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கு கடலூரில் ஒரு சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிகழ்வு எடுத்துக்காட்டு. எடப்பாடி யாரின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி தான் தமிழக மக்களின் தொழில் வளர்ச்சிக்கு பொற்காலம். பாராளுமன்ற புதிய கட்டிடத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல் தமிழ் நாட்டின் தொன்மை தொட்டு அடையாளமாக காணப்படுகிறது. இது தமிழன் பெருமை, தமிழ் நாட்டின் பெருமை, இதை விமர்சனம் செய்பவர்கள் தமிழனாக இருக்க முடியாது.

திமுக தமிழை வைத்து வியாபாரம் செய்கிறது, உலக தமிழ் பல்கலைகழகம் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஒரு பக்கம் தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள், மறுபக்கம் மத்திய அரசின் கொத்தடிமையாக  செயல்படுகிறது.

ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குற ஒரு அமைச்சர் உலகத்தில் இருப்பார்களா. தங்கமணி அமைச்சராக இருந்த போது ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க வில்லை. தமிழ் நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில்  குடிப்பவர்களின் எண்ணிக்கையை தான் அதிகமாகியுள்ளது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in