தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் அழைப்பு!

தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் அழைப்பு!

தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர அழைப்பு விடுத்திருக்கிறார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் முதல்வரை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சந்தித்துப் பேசவிருக்கிறார்கள். ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி இந்திய ஒற்றுமைப் பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்குகிறார். இந்தப் பயணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைப்பார் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவர்களை முதல்வர் அவரசமாக அழைத்திருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in