தூய்மை பணியில் பிரதமர் மோடி
தூய்மை பணியில் பிரதமர் மோடி

தூய்மை இந்தியா; பிரதமர் முதல் ஆளுநர் வரை குப்பைக்கு ’குட்பை’!

தூய்மை இந்தியா திட்டத்தின் 9 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். சென்னை கடற்கரைப் பகுதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. அதே ஆண்டு அக். 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். அதன் 9-ம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக இது குறித்து கடந்த 24-ம் தேதி ஒலிபரப்பான 105-வது `மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “காந்தி ஜெயந்தியன்று நாடு முழுவதும் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் தூய்மை இயக்கம் வேகம் பெற்றிருக்கிறது. `மனதின் குரல்' வாயிலாக நாட்டு மக்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நாடு தழுவிய தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது. அதற்கு நேரம் ஒதுக்கி, தூய்மை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன் என அழைப்பு விடுத்தார்.

இதனை ஏற்று மத்திய அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள், ஆளுநர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மல்யுத்த வீரர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை, உத்தண்டி, நயினார்குப்பம் மீனவ கிராம மாணவர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்து பிரதமர் மோடி தொடங்கிய தேசிய அளவிலான தூய்மை சேவை என்ற சமூகம் முன்னெடுக்கும் தூய்மை பிரசார இயக்கத்தில் பங்கெடுத்தார். இதனையடுத்து, ஆளுநர் ரவி தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடி, சமூக சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதில் அவர்கள் காட்டும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in