தமிழ்நாட்டில் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்தமிழ்நாட்டில் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படுவதால் காலப் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’தேசிய அளவிலான போட்டிகள் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பின் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நமது அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்திதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு யார் செய்தாலும் தவறு. அதன் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். இந்த பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்.

தலைமையாசிரியர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது இல்லை. தலைமையாசிரியர் பணியினை அந்த பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் கவனிக்கலாம் என உத்தரவிட்டுள்ளோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in