மது பாட்டில்களை உயரமான இடத்தில் பாதுகாப்பாக வைக்கவும்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு வந்த திடீர் உத்தரவு

மது பாட்டில்களை உயரமான இடத்தில் பாதுகாப்பாக வைக்கவும்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு வந்த திடீர் உத்தரவு

மதுபான கிடங்குகளில் உள்ள சரக்குகள், பதிவேடுகள், கோப்புகளுக்கு வடகிழக்கு பருவமழையினால் எந்தவித சேதாரமும் ஏற்படாதவாறு உரியத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அனைத்து துறைகளிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறை சார்பாகத் திறந்த நிலையில் உள்ள கிணறுகள், இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல் வெள்ளத் தடுப்பு பணிகளையும் பேரிடர் மேலாண்மைத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிப கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “மதுபான கிடங்குகளில் உள்ள சரக்குகள், பதிவேடுகள், கோப்புகளுக்கு வடகிழக்கு பருவமழையினால் எந்தவித சேதாரமும் ஏற்படாதவாறு உரியத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் இருப்பில் உள்ள மதுபான பெட்டிகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகள் மழை மற்றும் வெள்ளநீரால் பாதிக்கப்படாதவாறு தரையில் இருந்து உயரமான இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in