இலங்கைக்கு சீனா வழங்கியது தரமற்ற அரிசி?: வைரலாகும் வீடியோ

இலங்கைக்கு சீனா வழங்கியது தரமற்ற அரிசி?: வைரலாகும் வீடியோ

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு சீன அரசு கொடுத்த அரிசி தரமற்றதாக உள்ளது என இலங்கையைச் சேர்ந்தவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் பேசியிருப்பதாவது: நாட்டில் அதிகாரிகள் இருக்கிறீர்களா?  இல்லையா என தெரியவில்லை.  அரசு  அனுமதியின்றி சீன அரசே இங்குள்ள  பள்ளிக்கூடங்களில் கொண்டு வந்து போட்டுவிட்டார்களா என யோசிக்க தோன்றுகிறது. ஏனெனில் எந்த உணவு பொருள் வந்தாலும் மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததா என அதன் தரம் குறித்துஅதிகாரிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும்.

இந்த அரிசி மூட்டைகள் ஐந்து வயதிற்குட்பட்டோருக்கான குழந்தைகளை இலக்கு வைத்து  கொடுக்கப்பட்டுள்ளது. இதை சமைத்து சாப்பிடும் குழந்தைகள்  வயிற்று வலி உள்ளிட்ட தொந்தரவுகளால் அவதியடைகின்றனர். இந்த அரிசியை சமைத்தால் ரப்பர் களி போல் உள்ளது. இந்த அரிசியில் சமைக்கும் உணவுகளை  கால்நடைகளே புறந்தள்ளுகின்றன.

இதை எவ்வாறு சிறுவர்கள் சாப்பிட முடியும்? இதன் உள்நோக்கம் தெரியவில்லை. இது தான் சீன அரசின் உதவியா? இது சாப்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. இலங்கை அதிகாரிகள் சோதனை செய்யாமல், சீன அரசே நேரில் வந்து போட்டுச் சென்றதா? ஒரு பொருளை கொடுத்தால் எல்லோரும் சந்தோஷப்படுவது போல் கொடுக்க வேண்டும். இப்பிரச்சினைக்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in