சீனாவின் மாதிரி கிராமங்கள் அமையும் இடங்கள் நேரு ஆட்சிக்காலத்தில் பறிபோனவை; வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

அருணாச்சலில் சீனாவின் மாதிரி கிராமம்
அருணாச்சலில் சீனாவின் மாதிரி கிராமம்

எல்லையில் சீனா தனது மாதிரி கிராமங்களை உருவாக்கும் நிலங்கள் அனைத்தும், இந்தியாவின் முதல் பிரதமர் நேரு காலத்தில் பறிகொடுக்கப்பட்டவை என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் பலரும், மக்களவைத் தேர்தலின் மத்தியில் ஊடகப் பேட்டிகளை அதிகம் அளித்து வருகின்றனர். அந்தப் பேட்டிகளின் ஊடாக, 10 ஆண்டுகள் பாஜக ஆட்சிக்காலத்தின் சாதனைகள், திட்டங்கள் ஆகியவற்றின் பெருமிதங்களை பகிர்வதோடு, பாஜக ஆட்சி மீதான கடுமையான விமர்சனங்களுக்கும், இதுவரையில்லாத விளக்கங்களை அளித்து வருகின்றனர். அந்த வகையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த சில தினங்களாக அளித்து வரும் பேட்டிகள் கவனம் பெற்று வருகின்றனர்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

அவற்றின் அங்கமாக இந்தியாவுடன் எல்லையையும் அவை நெடுக தொல்லைகளையும் பாவிக்கும் பாகிஸ்தான் - சீனாவுடனான உறவுகள் குறித்தும் ஜெய்சங்கர் தற்போது விளக்கமளித்துள்ளார். ’அருணாச்சலப் பிரதேசம் மாநில எல்லையில் மாதிரி கிராமங்களை சீனா உருவாக்கி வருவதாகவும், கிழக்கு லடாக்கில் உள்ள நிலப்பரப்பைப் பறித்து வருவதாகவும்’ தொடரும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் பதில் தந்துள்ளார்.

"மாதிரி கிராமங்களை சீனர்கள் கட்டுகிறார்களா? ஆம். அந்த சர்ச்சைக்குரிய கிராமம் லோங்ஜு என்ற இடத்தில் உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் பதிவுகளை நீங்கள் சரிபார்த்தால் அல்லது சீனாவுடனான நமது எல்லைப் பிரச்சனை குறித்தான புத்தகத்தைப் படித்தால், 1959 இல் சீனர்கள் லோங்ஜுவைக் கைப்பற்றினர் என்பது தெரிய வரும். அது நம் கைகளில் தற்போது இல்லாமல் போய்விட்டது" என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்பான கேள்விகளுக்கு முழுமையான பதில்களை பாஜக தலைவர்கள் தவிர்த்து வந்ததன் மத்தியில், ஜெய்சங்கர் அந்த மவுனத்தை தற்போது உடைத்திருக்கிறார்.

"எதிர்க்கட்சியினர் மேற்கோள் காட்டிய இரண்டாவது உதாரணம் ஒரு பாலம். பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குப் பகுதியில் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. அது குர்னாக் கோட்டை என்ற இடத்திற்கு அருகில் உள்ளது. சீனர்கள் 1958-ல் குர்னாக் கோட்டைக்கு வந்தனர்” என்றார். அடுத்தபடியாக ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனர்களால் கட்டப்பட்டு வரும் சாலை, சியாச்சின் பகுதியில் இந்தியாவின் நிலைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியாக மாற்ற அனுமதித்ததும் நேரு தான் என்றார்.

உலக வரைபடத்தில் இந்தியா - சீனா
உலக வரைபடத்தில் இந்தியா - சீனா

"சியாச்சின் பாதுகாப்புக்கு தாக்கங்களை ஏற்படுத்தும் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கிலிருந்து ஒரு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கை 1949-இல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியாக மாற நேரு அனுமதித்தார். மேலும் 1963-ல், வெளியுறவு அமைச்சராக இருந்த சுல்பிகர் அலி பூட்டோ, சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அந்த நிலத்தின் 5,180 சதுர கிமீ சீனர்களிடம் சென்றது. ஆனால் இப்போது வந்து மோடி மீது எல்லோரும் குற்றம் சொல்கிறார்கள்" என்று ஆதங்கம் தெரிவித்தார் ஜெய்சங்கர்.

இதையும் வாசிக்கலாமே...


சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!

ஓடுபாதையில் விமானம் மீது மோதிய டிரக்; உயிர் தப்பிய 180 பயணிகள்; புனேவில் பரபரப்பு!

கையில் கட்டுடன், கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!

பெரும்பான்மை கிடைக்கலைன்னா பாஜகவின் ‘பிளான் பி’ என்ன? - அமித் ஷா அட்டகாச பதில்!

அஞ்சலி கொலையில் திடீர் திருப்பம்... ஓடும் ரயிலிலிருந்து குதித்த குற்றவாளி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in